"Rose is a Rose" நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வானதி சீனிவாசன் இடையே சுவாரஸ்ய விவாதம்..
"Rose is a Rose" என்று, ரோஜாப்பூவை முன்வைத்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுவாரஸ்ய விவாதம் நடைபெற்றது.
முதலில் பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், அண்மைகாலமாக, மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று அழைப்பதை காண்பதாக கூறினார்.
19ஆம் நூற்றாண்டின் பெண் கவிஞர் ஒருவர் எழுதிய கவிதையில், Rose is a Rose is a Rose என்ற வரி வரும் என, வானதி குறிப்பிட்டார். இதன்படி, எப்படி அழைத்தாலும், ரோஜாவின் மணத்தை மாற்ற முடியாது என்று, தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "Rose is a Rose is a Rose" என்பது ரோஸ் தான் என்றும், அதனை மல்லிகை என்று தாங்கள் சொல்லவில்லை என்றார்.
Comments